எதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை இரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் கூறினார். அடுத்துவரும் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு!