Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால், அதற்கு எதிராக மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

டொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லை என கடந்த வருடம் மார்ச் முதல் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதற்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்த பின்னர் மத்திய வங்கியில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நாணயமாற்று இருப்பு 9.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. சந்தையிலிருந்து இந்த வருடம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. இருந்தபோதும் செயற்கையான தோற்றப்பாட்டை ஏற்படுத்த நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால் அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிடும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.