Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவுதியில் அண்மைக் காலமாக அதிரடி அறிவிப்புக்கள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் சமீபத்தில் 'தி அத்லாந்திக் ஜெஃப்ரி கோல்ட்பேர்க்' என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் யூதர்கள் தமக்கு சொந்தமாக ஒரு நாட்டைக் கொண்டிருக்கும் உரிமை உடையவர்களே என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

7 தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேல் ஒரு தனிநாடாக உருவாகும் முன் இதற்கு எதிரான சக்தி வாய்ந்த எதிரியாக சவுதி அரேபியா திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானின் இந்தக் கூற்று சவுதி றோயல் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட ஒரு கொள்கை மாற்றத்துக்கும் அதிகமான இன்னொரு காரணத்தையும் கொண்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. அதாவது மத்திய கிழக்கில் போர் நிலவும் சிரியாவில் ஷியா இராச்சியமான ஈரானும் ரஷ்யாவும் சிரிய அரசை ஆதரிப்பதால், இவ்வலயத்தில் ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி இஸ்ரேலுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவை ஏற்படுத்துதல் என்பதே இக்காரணமாகும்.

ஈரானை இந்த வலயத்தில் எதிர்த்து தன்னுடன் கை கோர்க்கும் மிக வலிமையான நட்பு நாடுகள் இல்லாததால், அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2 ஆவது மிகப் பெரிய இராணுவ நட்பு நாடாக இஸ்ரேலுடன் கை கோர்ப்பதென்று சவுதி தீர்மானித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சவுதி பங்கேற்றிருந்த போதும் முதன் முறையாக இப்போது தான் அதிகாரப் பூர்வமாக இஸ்ரேலை யூதர்களின் தாய் நாடாக அங்கீகரித்துள்ளது.

அண்மைக் காலமாக நவீன இஸ்லாம் என்ற கொள்கையின் கீழ் சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் உரிமை மற்றும் திரையரங்குகளில் வெளிநாட்டு சினிமாக்களைப் பார்க்கும் உரிமை போன்ற உரிமைகளை சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான் அங்கீகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கும் உரிமை உள்ளவர்களே! : சவுதி இளவரசர்

Post a Comment

Followers