Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சம்பந்தமாக தமது பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாவது, ‘நம்பிக்கையில்லா பிரேரணை மீதாக விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுமானால் தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இது தொடர்பில் விவாதிக்கப்படும்.

அதன்படி எதிர்வரும் 02 அல்லது 03ம் திகதி தமிழத்; தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும். எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சில விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டி இருக்கின்றன.” என்றுள்ளார்.

0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers