பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிப்பெற்ற பின்னர், தேசிய அரசாங்கம் பதவியிழக்கும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது. அத்தோடு, ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்று வீடு செல்வார் என்றும் கூட்டு எதிரணி குறிப்பிட்டுள்ளது.
கூட்டு எதிரணியின் ஊடக சந்திப்பு பொரளையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்த்தனவே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்கடிக்கப்படும். நாங்கள் முதலில் பிரதமரை பதவி நீக்க வேண்டும், அதன் பின்னர் அரசாங்கம் தானாக பதவியிழக்கும், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. நிதி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் வேலை நிறுத்தங்கள். பாதாள உலகத் தலைவர்கள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளனர். இதுவே பிரதமர் தலையிலான அரசாங்கத்தின் பெறுபேறு” என்றுள்ளார்.

0 Responses to தேசிய அரசாங்கம் நாளை பதவியிழக்கும்; ரணில் வீடு செல்வார்: கூட்டு எதிரணி