Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2050ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அடித்தளம் மற்றும் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது மிகவும் சவால் மிகுந்த பணி எனவும், பல்வேறுபட்ட கருத்துக்களையுடைய மக்கள் குழுவினருடன் மிகவும் பொறுமையுடனும், விழிப்புடனும் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் சிங்கப்பூர் வர்த்தக மன்றம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இலங்கை - சிங்கப்பூர் வர்த்தக சந்திப்பின் கேள்வி நேரத்தில் கலந்துகொண்டபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தினை மிகவும் சிறப்பாக விளங்கிக் கொண்டுள்ளமையினால், பொருளாதார, நிதி மற்றும் சமூகக் கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது நீண்ட கால இலக்காகக் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்ட சமூக ஒழுங்கொன்றை உருவாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் கொள்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளுடன் காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும், தொழில் முயற்சி தொடர்பான கலாசாரத்தை நாட்டினுள் விருத்தி செய்ய வேண்டும். நாம் சம்பிரதாய ரீதியாகவே வணிக நாடு என்பதைக் கூற வேண்டும். அந்த சம்பிரதாயத்தை இன்னும் நாட்டினுள் காண முடியும். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to 2050க்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.