Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஒரு மாதமாக பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹாவாய் தீவில் எரிமலை வெடிப்புத் தீவிரமடைந்து வருகின்றது.

இதனால் இலட்சக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஹாவாய் தீவின் கடலுக்கடி எரிமலையும் சீற்றமடைந்து லாவா குழம்பைக் கக்கத் தொடங்கியுள்ளது.

திடீரென இந்த எரிமலை இரு நாட்களுக்கு முன்பு சீற்றமடைந்ததால் லாவா குழம்பு சிதறி அருகே ஒரு கப்பலில் போய்க் கொண்டிருந்த மக்கள் மீது விழுந்ததில் 23 பேர் காயம் அடைந்ததாகத் தெரிய வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஹாவாய் தீவில் 13 முறை எரிமலை வெடித்துச் சீறியுள்ளதுடன் பெருமளவான லாவா குழம்பு வெளியேறிக் கடலில் கலந்த வண்ணம் உள்ளது. இதில் தான் இரு நாட்களுக்கு முன்பு கடலடி கிலாயூ எரிமலையும் சீற்றமடைந்துள்ளது. இது தவிர ஹாவாய் தீவிலுள்ள பொது மக்களின் வதிவிடங்களை நோக்கி எரிமலை லாவா குண்டுகள் வந்து வீழ்ந்த வண்ணம் இருப்பதாலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அண்மைக் கால கிலாயு எரிமலை சீற்றத்தால் ஹாவாய் தீவின் பல இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகி உள்ளதுடன் மொத்த மக்கள் தொகையில் 70% வீதமானவர்கள் தமது தீவை விட்டு ஏற்கனவே வெளியேறி விட்டனர். இதில் சிலர் மரணமடைந்திருந்த போதும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக எந்தவொரு உயிர் சேதத்தையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமீபத்தில் 230 பேரின் உயிரைப் பறித்துக் கொண்ட ஜப்பானின் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு நீங்குவதற்கு முன்பே தற்போது அங்கு மிக மோசமான வெப்ப அனல் காற்று வீசி வருகின்றது. இதனால் இதுவரை 34 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்ந்த இரு வாரத்தில் இதுவரை ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 1050 மில்லிமீட்டர் அளவுக்கு கடும் மழை பெய்திருந்தது. இதில் மொத்தம் 230 பேர் பலியாகியும் 400 பேர் காணாமற் போயும் 20 இலட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்பாதிப்பு நீங்க முன்பே உடனே அங்கு வானிலை தலைகீழாக மாறி கடும் அனல் காற்று கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீசி வருகின்றது. நொடிக்கு நொடி வெப்பமும் அனல்காற்றின் அளவும் அதிகரித்து வந்தது. 34 டிகிரி செல்ஸியஸைத் தாண்டி வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ் வரை வடக்கு ஜப்பானில் வெப்பம் நிலவியது. ஏற்கனவே வெள்ள அனர்த்த மீட்புப் பணி முற்றுப் பெறாது பலர் தவித்து வரும் நிலையில் ஆயிரக் கணக்கான மக்கள் தற்போது ஜப்பானில் வெப்ப அனல் காற்றால் பாதிக்கப் பட்டு வைத்திய சாலையில் கடும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதில் 34 பேர் பலியாகி விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to ஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்! : ஜப்பானில் வெப்ப அனல் காற்றுக்கு 34 பேர் பலி

Post a Comment

Followers