Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என்று முன்னாள் அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொண்டார். அங்கு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சசி தரூர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும். இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானக மாறிவிடும்’. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும்.” என்றுள்ளார்.

0 Responses to நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.