சனிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பல் பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளே காரில் வந்து மோதி திடீரென நுழைந்த மர்ம துப்பாக்கி தாரி ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவரகளில் சிலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தான். இதனை அடுத்து பதற்றம் அடைந்த மக்கள் அலறியடித்தவாறு அவசரக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியாக தப்பித்து ஓடினர்.
விடயத்தைக் கேள்விப் பட்டு போலிசார் விரைந்து வந்து அங்காடியை சுற்றி வளைத்தனர். மேலும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்தனர். போலிசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே நடந்த சில மணித்தியாலங்களாக இட்ம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் பின்பு அவரை உயிருடன் கைது செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது உள்ளே ஒரு பெண்மணி துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
28 வயதாகும் குறித்த மர்ம நபர் காரில் புறப்படும் முன்பே தனது பாட்டியையும் காதலியையும் குடும்பத் தகராறு காரணமாக சுட்டுக் கொலை செய்து விட்டுத் தான் குறித்த டிரேட் ஜோ ஸ்டோர் என்ற அங்காடிக்குப் பாட்டியின் காரில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். மீட்பு நடவடிக்கையின் போது போலிசார் மிக அவதானமாக ஸ்னைப்பர் துப்பாக்கிகளைக் கூடப் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் சட்டப் படியான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப் படும் என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

0 Responses to லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி