Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் தற்போதைய நிலைப்பாடாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பில் தம்மிடமே அங்குள்ள தலைவர்கள் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையிலுள்ள பெருமளவிலான பௌத்த துறவிகள் நல்லவர்கள். சமாதானத்தை விரும்புகிறவர்கள். எனினும், சிலர் அடிப்படைவாதிகள். ஒரு பௌத்த தேரர் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் அடிப்படைவாதியாக இருக்கக் கூடாது.” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற சர்வமதப் பேரவை மாநாட்டில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய சந்திரிக்கா குமாரதுங்க, "சர்வமத நல்லிணக்கத்தின் மூலம் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். நல்லிணக்கம், சமாதானம் என்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாகும்.

எமது நாட்டின் வடக்கு, கிழக்கில் மூன்று தசாப்த காலம் ஓர் இனம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள யுத்தம் செய்தது. வடக்கு, கிழக்கில் யுத்தம் அம்மக்களின் உரிமை தனித்துவம், தேசிய அடையாளம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இடம்பெற்றது.

0 Responses to பௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.