Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பு திங்கட்கிழமை ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் இடம்பெற்றது.

ஏற்கனவே முன்னைய அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்பது தொடர்பில் அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையில் FBI விசாரணை நடத்தி வருகின்றது.

ஆனால் இச்சந்திப்பின் பின்பு டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டியதான தேவை ஒன்றும் அவர்களுக்கு இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றிருந்தார். மேலும் ஒரு படி போய் இச்சந்திப்பின் பின்னதான டுவீட்டில் ரஷ்யாவுடன் எம் உறவு மிக மோசமாகச் சென்றதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா வசமிருந்த முட்டாள்தனத்துக்கு நன்றி என்றும் நகையாடி இருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போதும் அதிபர் தேர்தல் தலையீடு தொடர்பாக நடத்தப் பட்டு வரும் விசாரணை தன்னை வெகுவாகப் பாதிப்பதாகக் கூறினார்.

டிரம்பின் இக்கருத்துக்கள், அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டுமன்றி டிரம்பின் சொந்தக் கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பையும் விமரிசனத்தையும் சம்பாதித்துள்ளது. அமெரிக்க எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி ரஷ்ய அதிபர் முன் அமெரிக்காவின் கௌரவத்தை டிரம்ப் இறக்கி வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளது. கலிபோர்னியா மாநில முன்னால் கவர்னர் மற்றும் ஹாலிவுட் நடிகரான ஆர்னால்ட் டிரம்பை கடுமையாக விமரிசித்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதிலும் முக்கியமாக புட்டினுடன் ஆட்டோகிராஃப் அல்லது செல்பி எடுக்க அனுமதி வேண்டிச் சென்றவர் போல் இருந்தது டிரம்பின் உடல்மொழி என ஆர்னால்ட் கவலை வெளியிட்டுள்ளார்.

இரு கட்டங்களாக பல மணி நேரத்துக்கு அதிபர் டிரம்ப் மற்றும் புட்டின் இடையேயான சந்திப்பு இடம்பெற்றது. இதில் பேசிய விடயங்களாக அதிபர் டிரம்ப் பகிர்ந்து கொண்ட போது, மிகச் செறிவான முக்கியமான விடயங்கள் குறித்துப் பேசப் பட்டதாகக் கூறினார். அதிலும் அமெரிக்க ரஷ்ய உறவு சீர்குலைந்ததற்கு முன்னால் ஜனாதிபதிகளைக் குற்றம் சாட்டிய டிரம்ப் தமது இரு தேசங்களையும் இணைந்து பார்க்கத் தான் சர்வதேசம் விரும்புகின்றது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மாத்திரம் உலகின் 90% வீத அணுவாயுதப் பலம் உள்ளது என்றும் இது நல்லதற்கல்ல என்று டிரம்ப் கூறியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு! : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்

Post a Comment

Followers