வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடைசி வரை அவைத்தலைவராகவே இருக்கலாமென வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடயத்தால் வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளமைக்கு பதிலளித்துள்ள அவர் ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்க முடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம்.
மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வுடமாகாணசபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாது விட்டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது. அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு!