“பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மையில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். டிசம்பர் மாதம் 05ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருக்கிறேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதன்போது, கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி, “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் போது, அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்காமை தவறு என்பதை நான் உணர்கிறேன். ஆட்சி மாற்றத்தின் பின் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சில தீர்மானங்கள் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலமும், சில தீர்மானங்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம் தான் நடந்துள்ளது.
ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த விடயத்தில் குரல் பதிவு வாக்கெடுப்பு முறையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனவே, எதிர்வரும் 05ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பை நடாத்தி அதில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க நான் தயாராகவுள்ளேன்.
பெரும்பான்மையை பெறும் தரப்பு பிரதமருக்கான பெயரை முன்மொழிகின்ற போது அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இந்த வாக்கெடுப்பின் போது ஒருவேளை பெரும்பான்மை பலத்தை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றால், அத்தரப்பினர் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை பரிந்துரை செய்தால், அதனை நான் ஏற்க தயாராக இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியில் வேறு பெயர்களை பரிந்துரை செய்தால் அதனை நான் ஏற்பேன்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந்த போதும், அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் அவர் என்னை மதிக்கவில்லை, அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஊழல் மோசடி விடயங்களிலும் அவர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். அதனால் தான் அவரை பிரதமர் பதவியிலிருந்து நான் அகற்றினேன். இந்த நிலையில் மீண்டும் அவரை பிரதமர் பதவியில் நான் எவ்வாறு அமர்த்துவது?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு கூட்டமைப்பினர், “ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தப்போவதில்லை என்று நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். ஏனெனில், உங்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது மட்டுமன்றி, உங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்டவர்களில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி உங்களுக்காக அரும்பாடுபட்டவர்களுக்கு நீங்கள் எந்தவித அறிவித்தலும் விடுக்காமல் நேரில் கலந்துரையாடாமல், அரசியலமைப்பிற்கு முரணாக மக்கள் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபனக்ஷவை பிரதமராக நியமித்தீர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களை எதிர்த்து நின்று போட்டியிட்டு படு தோல்வியடைந்தவரை புதிய பிரதமராக எவ்வாறு நாம் ஏற்பது?
மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக்கினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றில் இது வரை 5 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மஹிந்த மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீது மீண்டும் வாக்கெடுப்பு நடாத்த நாம் தயாராகவுள்ளோம்.
உங்கள் வேண்டுகோளின் படி மீண்டும் வாக்கெடுப்பை பெயர் கூறி அல்லது இலத்திரனியல் முறையில் நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் தயாராகவுள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறவே நாம் வாக்களிப்போம். இதனைக் கூட்டமைப்பினராகிய நாம் எழுத்து மூலம் உங்களுக்கு அறிவித்துள்ளோம். ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் பிரதமர் பதவிக்கு முக்மொழிகின்றவரையும் ஆதரிக்க நாம் தயாராகவுள்ளோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி பிரதமராக முன் மொழிகின்றவரை நீங்கள் பிரதமராக நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இறுதியாக 05ஆம் திகதி குறிப்பிட்டதைப் போல வாக்கெடுப்பை நடாத்துங்கள் அதன் பின்னர் தீர்மானிக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதை மைத்திரி ஏற்றுக்கொண்டுள்ளார்: த.தே.கூ.