Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“எமக்கு ரணில் விக்ரமசிங்க மீதும் நம்பிக்கையில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் நம்பிக்கையில்லை. நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு விடயத்திற்காக மாத்திரமே நாம் போராடுகின்றோம். அத்துடன் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காவே நாங்கள் போராடுகின்றோம். ஆகையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, அதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ககும்போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ரணில் மீதும் நம்பிக்கையில்லை, மஹிந்த மீதும் நம்பிக்கையில்லை: ஜே.வி.பி

Post a Comment

Followers