மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை மாலை 06.40) பதவியேற்றார்.
மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. விழாவிற்கு பங்கேற்காதது குறித்து இருவரும் உத்தவுக்கு கடிதம் அனுப்பினர்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து 'மகா விகாஸ் அஹாதி' எனப்படும் மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணியை அமைத்தன. இந்த கூட்டணி தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணி, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், சற்றுமுன்னர் உத்தவ் தாக்ரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, திமுக தலைவர் ஸ்டாலின், மஹா., முன்னாள் முதல்வர் பட்னவிஸ், அஜித்பவார், சகஜ்புஜ்பால், பிரபுல் படேல், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானி, காங்., தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Responses to மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்!