Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும், வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்றபோவதில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு- கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும், அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர். குறிப்பாக, வடக்கு- கிழக்கில் உள்ள பௌத்த உரிமைகள் தேசத்தின் அபிமானமாக கருதப்பட வேண்டும். அது குறித்து தொல்லியல் திணைக்களத்துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அதேபோல், வடக்கு- கிழக்கில் உள்ள இராணுவம் அகற்றப்படாது. இராணுவ முகாம்கள் இருப்பதால் மக்களுக்கு சேவை வழங்கப்படுமே தவிர ஒருபோதும் மக்களுக்கு நெருக்கடியாக இராணுவம் செயற்படாது. அதனால் இராணுவத்தினர் இருக்க வேண்டிய பகுதிகளில் இருந்து அவர்களை அகற்போவதில்லை. யுத்தம் இருந்த காலத்திலும் வடக்கு- கிழக்கு மக்களின் நெருக்கடி நிலைமைகளின் போது இராணுவமே உதவியது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை: பாதுகாப்புச் செயலாளர்

Post a Comment

Followers