Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை பல்லாவரம் அருகே இருமல் பிரச்சனைக்காக, பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில், தவறான முறையில் நரம்பு ஊசி போடப்பட்டதாகவும், இதில் அவர் இறந்ததை மறைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் நித்யா என்கிற லிபியா. 21 வயது பட்டதாரி பெண்ணான இவருக்கு, இருமல் மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள ஜெயம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நித்யாவுக்கு பெண் மருத்துவர் சுஜாதா கருணாகரன் பரிசோதித்து கையில் நரம்பு ஊசிபோட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறிது நேரத்தில் மூச்சுச்திணறல் ஏற்பட்டு நித்யா மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர், ஜெயின் மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார். அங்கு நினைவிழந்த நிலையில் நித்யாவை கொண்டு சென்ற போது உள்ளே அனுமதிக்க மறுத்ததுடன், அவசரத்து உயிரை காப்பாற்ற ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யுமாறு தாய் கதறி காலில் விழுந்து கெஞ்சியும், உதவ மறுத்து விட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற நிலையில், நித்யாவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் நித்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவே உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் கதறித்துடித்தனர்.

இது தொடர்பாக பெண் மருத்துவர் சுஜாதா கருணாகரன் மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 Responses to இருமலுக்கு நரம்பு ஊசி? இளம் பெண் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers