Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திங்கட்கிழமை இரவு பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயலுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் புயலுடன், கனமழையும் பெய்து வருவதால் நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளன. முக்கியமாக பிலிப்பைன்ஸின் பல்வேறு நகரங்களின் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இலட்சக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப் பட்டும் வருகின்றனர். மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. பெரும்பாலான மக்கள் பிகோல் மற்றும் மிமாரபோ நகரங்களில் பலியாகி உள்ளனர். கனமழை தொடர்ந்து நீடிப்பதால் பொது மக்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸின் தென்கிழக்குப் பகுதியின் லுசோன் தீவை புதன்கிழமை தாக்கிய சக்தி வாய்ந்த புயலுக்கு கம்முரி என்று பெயரிடப் பட்டுள்ளது. இதன் போது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேஎகத்தில் புயல் வீசியதாகத் தெரிய வருகின்றது. இப்புயல் காரணமாக 6 மாகாணங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த கம்முரி புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் நடந்து வரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிக்கள் தடைப் பட்டுள்ளன.

சில விளையாட்டுக்கள் ஒத்தி வைக்கப் பட்டும் வேறு சில விளையாட்டுக்கள் முழுமையாக ரத்து செய்யப் பட்டும் உள்ளன. மீட்புப் பணியில் போலிசும் இராணுவமும் கை கோர்த்துள்ளது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய 20 ஆவது புயல் கம்முரி என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிலிப்பைன்ஸைத் தாக்கிய டிசோய் மற்றும் கம்முரி புயலுக்கு 13 பேர் பலி!

Post a Comment

Followers