“பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பு மனு வழங்கப்படவுள்ள நிலையில், எனக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளமையை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தாரதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாடப் பரீட்சையை நேற்று வியாழக்கிழமை எழுதிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கட்சி தொடர்பில் பேசியதன் பயனான 30க்கு மேற்பட்ட வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எனக்கு கட்சியில் வேட்பு மனு வழங்கப்படாது என தெரிவிக்கப்படுவதற்கு என்ன காரணம்? திருடர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படும் போது என்னை போன்ற அப்பாவி புறக்கணிக்கப்படுதற்கு காரணம் என்ன?
நான் கட்சி தொடர்பில் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டை கூற வேண்டும். என்னைப் புறந்தள்ளும் இடத்தில் இருப்பது சிறந்ததல்ல. ‘ஒரு முறை நான் தேவையில்லை என்றால் ஆயிரம் முறை நீங்கள் எனக்கு வேண்டாம்’ என்ற விஜய குமாரதுங்கவின் பாடல் வரிகள் எனக்கும் பொருந்தும்.” என்றுள்ளார்.

0 Responses to எனக்கு வேட்புமனு மறுக்கப்பட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை: ரஞ்சன் ராமநாயக்க