கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடியாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான முறைமை ஒன்றை வகுப்பதுடன், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெற்றிடங்களுள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவகையில் தொழிற்படை ஒன்றை உருவாக்குதல் மற்றும் அதற்கு உதவும் பாடத்திட்டத்தை தயாரித்தல் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள், மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கல்வித்துறையில் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கோட்டா எடுத்துரைப்பு!