‘நான் அதிகளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.130 முதல் ரூ.180 வரை உள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் அளவு குறைந்தது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து டில்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பான விவாதம் நேற்று புதன்கிழமை நடந்தது.
வெங்காய விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் எனவும், பொருளாதார மந்த நிலை காரணம் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் குற்றம்சாட்டி பேசினர். அப்போது ஒருவர், வெங்காயத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் அதிகம் வெங்காயம் சாப்பிடுபவர்களை எரிச்சலடைய வைக்கும் என்றார்.
அதற்கு குறுக்கிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், "நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள் " என்றார். இது லோக்சபாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தற்போதுள்ள நிலையை சமாளிக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

0 Responses to நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை: நிர்மலா சீதாராமன்