இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கவலை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், சுல்தான் பதேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: “நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளதையும், சட்டம் ஒழுங்கு இல்லாததும், பெண்களுக்கு எதிரான தாக்குதலும் அதிகரித்துள்ளதை நீங்கள் பார்க்கலாம். பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது, பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது குறித்த செய்திகள் தினசரி வெளியாகின்றன.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கு எதிரான கொடூரங்கள் நடக்கின்றன. அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இதனால்,தான் வன்முறை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுத்து கொள்வதால், நமது அடிப்படை கட்டமைப்புகள் உடைந்து போகின்றன. இதற்கு நாட்டை வழிநடத்துகிறவர், வன்முறையிலும் அதிகாரத்தையும் நம்புவதே காரணம்.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; ராகுல் கவலை!