Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில், எதிர்வரக்கூடிய தேர்தல்களின் போது எதிர்நோக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது நிருவாக அமைச்சுக்கும் அரச சேவை ஆணைக்குழுவுக்கும் பாரப்படுத்தப்பட்ட போதிலும் அது குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அத்துடன் சில அரச ஊடகங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி பக்கச் சார்பாக செயற்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகளை பொலிஸாருக்கும், அரசை சேவை ஆணைக்குழுவுக்கும் பாரப்படுத்திய போதிலும் அது குறித்தும் இதுவரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. முக்கியமாக சில இலத்திரனியல் ஊடகங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களைக் கூட கருத்தில் கொள்ளத் தவறியிருந்தன.” என்றுள்ளார்.

0 Responses to தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் இன்னமும் நடவடிக்கை இல்லை: மஹிந்த தேசப்பிரிய

Post a Comment

Followers