Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே 2009 ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது பல அழிவுகள் நடந்தது என்னவோ உண்மைதான் ! புலிகளின் பல முக்கிய களமுனைத் தளபதிகள் கொல்லப்பட்டதும் உண்மைதான், ஆனால் நாம் அழிந்து விட்டோமா ? அதற்கு அப்பால் யார் யார் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள் ? எவர் எவர் இடம் மாறினார்கள் ? இன்னும் புரியாத புதிராகவே உள்ளதா ? சுமார் 23 படகுகள் முள்ளிவாய்க்காலில் இருந்து இந்துமா கடலின் தெற்கு திசை நோக்கிப் புறப்பட்டதாக தகவல்கள் சொன்னாலும், அந்த நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் சில செய்திகள் இருக்கின்றதே என்று சொல்லும்சிலர்.... பலர் பலவகையான கருத்துக்களைக் கூறிவந்தாலும் இது தொடர்பான ஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்கத் துடித்த செய்திகள் சிலவும் வெறும் ஊகமாகவே இருந்து வந்துள்ளது. உண்மை நிலை தான் என்ன என பலரும் யோசிக்கும் தருணம் இது.


ஆனால் உண்மை வெகுநாள் உறங்குமோ?

பல காலமாக புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்து, இன்று கயவர்கள் கைகளில் சிக்கித் தவிக்கும் வன்னி நிலப்பரப்பில் இருந்து, சில புகைப்படங்களும் ஒரு சில தகவல்களும் உற்சாகம் தரக்கூடிய செய்திகளைச் சுமந்து வந்துள்ளன,,,,,,, அதுதான் என்ன ? பல நாட்களாக இருந்துவரும் கேள்விகளுக்கு அது விடைதருமா ? வெறுமனவே ஒரு சுரங்கப் பாதையைக் காட்டி ஒரு செய்தி சொல்வதாக எண்ணவேண்டாம். ஏன் எனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இருந்த பல முக்கிய தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் நாம் இங்கு காண்பிக்கும் படம் நன்கு புரியும். அது போன்ற சுரங்கங்களைக் கிண்டிய போராளிகள் கூட இன்னும் உயிரோடு இருக்கலாம் ! அவர்களுக்கு இது எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களும் தெரிந்திருக்கும்.

ஆம்! நீங்கள் இங்கே பார்ப்பது புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் சில களமுனைத் தளபதிகளும் தங்கியிருந்த இடத்தில் காணப்படும் சுரங்கப் பாதை. ஆனால் அவை தற்போது கடல் நீரால் நிரப்பப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. அதாவது இச் சுரங்கப் பாதை நேரடியாக கடலோடு தொடர்புடையதாக இருந்ததாகவும், அதனூடாக தப்பிச் சென்ற பின்னர் அச் சுரங்கப்பாதையை யாரோ வெடிவைத்துத் தகர்த்து விட்டதாகவும் இலங்கை இராணுவமே தன் வாயால் கூறியுள்ளது. சுரங்கம் தகர்க்கப்பட்ட காரணத்தால் கடல் நீர் அங்கு புகுந்துள்ளது.


அப்பாதை எங்கே செல்கிறது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை என்கிறது இராணுவம். அப்பாதை எங்கே செல்கிறது என்று சுழியோடிப் போய் பார்ப்பதற்கு எவரும் தயார் இல்லை. காரணம் அங்கே நீருக்கு அடியில் மேலும் கண்ணிவெடிகள் அல்லது பொறிவெடிகள் இருக்கலாம், அவை வெடித்தால் உயிரோடு திரும்பமுடியாது என்று எல்லோரும் அஞ்சுவதே காரணம் ஆகும்.

இவ்வாறானதொரு நிலையில் இச் சுரங்கம் காணப்படுவதாகவும், அங்கே விட்டுச் செல்லப்பட்ட பொருட்களைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அங்கே இருந்திருக்கக் கூடும் எனவும் இராணுவமே ஒத்துக்கொள்கிறது. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சமரின்போது, பல இடங்களைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கே காணப்பட்ட சில அதிசய இடங்களையும் புகைப்படம் பிடித்து வைத்துள்ளனர். அவற்றில் இவையும் அடங்கும். போர்க்களத்தில் நின்ற இராணுவத்தினர் இச் சுரங்கத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.

எமக்கு கிடைக்கப்பெற்ற இச் செய்திகளை நாம் வெளியிட்டுள்ளோம். தமிழீழ மக்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் மனதிலும் ஒரு உற்சாகம் பிறக்கும் செய்தியாக இது இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எங்கள் மனதை நிரப்புகிறது. அதை நாம் உணர்கிறோம்!

ஆயிரம் ஆயிரம் போராளிகள் எதற்காகப் போராடினார்களோ, ஏன் வீர மறவர்களாகிக் களமாடினார்களோ அவர்கள் கனவுகள் பலிக்கவேண்டும் ! எதை எமது தேசிய தலைவர் விரும்பினாரோ, எந்த விடுதலைக் காற்றை அவர் சுவாசிக்க நினைத்தாரோ அதனை நாம் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்! தமிழீழம் எங்கள் மூச்சு! தமிழீழம் எங்கள் பேச்சு! தமிழீழம் எங்கள் உயிர்! என ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்திடவேண்டும!

"தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் நாங்கள் விடுதலைப் புலிகள்"" என்றான் ஒரு கவிஞன் ! அதன் உயிர் நாடியாம் எம் தேசிய தலைவர் பிறந்த நாளில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்! எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய துயர் வந்தாலும் எமது ஈழவிடுதலை என்னும் தீ ஓயாது ! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் நாம் இருக்கமாட்டோம் என்பதேயாகும். போராடும் இனம் தோற்றதாக வரலாறு இல்லை ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் எமது இலக்கை எட்டும்வரை விடுதலைப் போர் ஓயாது என்னும் உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்!

எம்மோடு போகாமல் எம் சந்ததிக்கும் விடுதலை உணர்வைக் கற்றுக்கொடுப்போம் ! புலத்தில் பிறந்தாலும் எம் பிள்ளைகளுக்கு விடுதலை என்னும் தீ இன்னும் அணைந்து விடவில்லை என்பதை கூறிக்கொள்வோம் ! இனி வரும் வரலாறு எம் கதைகளை சரித்திரமாக எழுதட்டும்!. அதில் ஒவ்வொரு தமிழனும் இடம்பெறட்டும்!

அதிர்வின் ஆசிரியபீடம்

இச் செய்தி அதிர்விலிருந்து...


10 Responses to விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்? (படங்கள் இணைப்பு)

 1. Ithu kathai alla nijam.
  pejarillamal solla vanthiddiyada sinhalakkaadaikku piranthavane.

   
 2. muthu Says:
 3. tamilan eelam see that very soon

   
 4. Veerm vellyum athi kallam sollum

   
 5. Raja Says:
 6. hahahhaaaa.
  hope this is 2010 welcome Joke. roosam yillaya? Yinnam thalaivan yirukaan enduthaane yeemaatha paakayal?

   
 7. இது உம்மையானால் மகிழ்ச்சி
  ஒன்றுப்பட்டால் தமிழீழம் மலரும் மாண்டவர் கனவு நிறைவேறும்

   
 8. Lali
  Very Happy... Really Very Happy.

   
 9. ethu unnmaiyaga eirukattum, ulaga tamilan ellorukkum makilchi

   
 10. that is true, our leader will be coming soon.

   
 11. suresh Says:
 12. its good for our tamil eelam,i hope its true,our leader and solders are going to make separate tamilland its TAMILEELAM as soon as possible,but dont keep quit our peoples,give our all supports to our leaders and make TAMILEELAM.

   
 13. நம் தலைவன் வருவான் என்று நம்பாதவன் தமிழனுக்குப்பிறந்தவனாக இருக்கமாட்டான்.

   

Post a Comment

Followers