Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து, வாராந்தம் அறிக்கையை தன்னிடம் சமர்பிக்க வேண்டும் எனவும் பொலிஸாரிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொலிஸாருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழில் இயங்கும் ஆவா மற்றும் தனு ரொக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களே, வாள் வெட்டு சம்பவங்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த குழுவில் உள்ளவர்களின் ஒளிப்படங்கள், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களின் ஒளிப்படங்கள், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களின் ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் எனக்கு காட்டினார்கள். தற்போது குறித்த குழுக்களின் செயற்பாடுகளை தாம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இரு குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.